ராமதாஸின் தந்திரம் தெரியாதா? அங்க பேரம் படியல அதான் நாடகம் நடத்துறாங்க... பாமகவை பயங்கரமாக வம்பிழுக்கும் திருமா!!

Published : Feb 12, 2019, 11:34 AM ISTUpdated : Feb 12, 2019, 12:09 PM IST
ராமதாஸின் தந்திரம் தெரியாதா? அங்க பேரம் படியல அதான் நாடகம் நடத்துறாங்க... பாமகவை பயங்கரமாக வம்பிழுக்கும் திருமா!!

சுருக்கம்

அங்க பேரம் பட்டியலை அதான் இங்க வந்து எங்க கூட்டணியில் ஏதாவது கிடைக்குமான்னு பாமக எதிர்பார்க்கிறாங்க என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் கூறினார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்; திமுக, கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த, சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர். திமுக, - அதிமுக, இரு கட்சிகளிடம் பேசுவது போல, தோற்றத்தை ஏற்படுத்துவதன் வாயிலாக, தங்களின் பேரத்தை உயர்த்த முடியும் என்பதே, பாமக,வின் தந்திரம். தேவையில்லாமல், விடுதலை சிறுத்தைகளை சீண்டி, திமுக, கூட்டணியில், முரண்பாட்டை உருவாக்கலாமா என, பகல் கனவு காண்கின்றனர்; அது, பலிக்காது.

தி.மு.க.,வுடன், பாமக, உறவு வைத்துக்கொள்ள விரும்புவது உண்மை என்றால், அது, நஞ்சு கலந்த நயவஞ்சக உறவாக தான் இருக்கும். திமுக., - பாமக, கூட்டணி உருவாக வாய்ப்பு இல்லை.

பிஜேபி, - அதிமுக,வுடன், பாமக, பேச்சு நடத்துகிறது. அவர்கள் எதிர்பார்த்த அளவில், அதிமுக,வுடன் பேரம் படியாததால், அவர்களே திட்டமிட்டு, இந்த நாடக அரசியலை நடத்துகின்றனர். பாமக, - பிஜேபி இருக்கும் அணியில், நாங்கள் இடம்பெற மாட்டோம் என திருமாவளவன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து..! எம்.பி.க்களிடம் வழங்கப்பட்ட புதிய திட்டதின் வரைவு மசோதா நகல்..!
பெரியார் 8 பதவிகளை ராஜினாமா செய்தவர்..! இவர்கள் பதவிக்காகவே உயிர் வாழ்பவர்கள்.. நாஞ்சில் சம்பத் கிண்டல் பேச்சு