பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்... 19 இல்ல... இனி 1 தான்..!

By vinoth kumarFirst Published Feb 12, 2019, 11:17 AM IST
Highlights

பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தரும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தகவல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தரும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தகவல் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக கட்சியை வலுப்படுத்த பிரதமர் மோடி முக்கிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வந்த மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர், பா.ஜ.க. பொதுகூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார். 

இதனையடுத்து கடந்த 10-ம் தேதி திருப்பூர் வந்த மோடி, சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பாஜக பொதுக்கூட்டதிதல் பங்கேற்ற அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.   

அதன்பின்னர் வரும் 19-ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகையின் போது அரசு நிகழ்ச்சி மற்றும் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி வருகையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதிக்குப் பதில், மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

click me!