வி.சி.க.,வுக்கு ஒரு மாவட்டக் கவுன்சிலர் கூட இல்லை... திமுக கூட்டணியில் கடைசி இடம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 2, 2020, 4:49 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் படு மோசமான தோவ்லியை அடைந்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 1.5 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று ஓரிடத்தில் கூட கவுன்சிலர், அல்லது மாவட்ட கவுன்சிலர் பதவிகளை பிடிக்க முடியாமல் போனது. 

உள்ளாட்சித் தேர்தலில் படு மோசமான தோவ்லியை அடைந்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 1.5 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று ஓரிடத்தில் கூட கவுன்சிலர், அல்லது மாவட்ட கவுன்சிலர் பதவிகளை பிடிக்க முடியாமல் போனது. 

திமுக 115 மாவட்ட கவுன்சிலர்களையும்,  298  ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் பிடித்துள்ளது. காங்கிரஸ் 5 மாவட்ட கவுன்சிலர், 12 ஒன்றிய கவுன்சிலர், மதிமுக 1 மாவட்ட கவுன்சிலர், 14 ஒன்றிய கவுன்சிலர், இந்திய கம்யூனிஸ்டு 6 மாவட்ட கவுன்சிலர், 11 ஒன்றியக் கவுன்சிலர், மா கம்யூனிஸ்டு 1 மாவட்ட கவுன்சிலர், 1 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பிடித்துள்ளது.

ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரே ஒரு கவுன்சிலர் சீட்டை மட்டுமே பிடித்துள்ளது. அதேபோல், கடலூர் அடுத்த சிங்கிரிகுடி ஊராட்சி மன்ற தலைவருக்கு விசிக சார்பில் போட்டியிட்ட ராமச்சந்திரன் வெற்றி. திருவள்ளூர், கல்யாணகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு விசிக சார்பில் போட்டியிட்ட சுமிதா வெற்றி பெற்றுள்ளனர். 

இன்னும் பல இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருப்பதால் விடுதலை சிறுத்தைகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கணிக்க இயலவில்லை. திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் பெற்ற இடங்களைக் கூட பெறமுடியாமல் விடுதலை சிறுத்தைகள் மிகவும் பின் தங்கி இருக்கிறது. சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தலில் கூட்டணிபலத்தில் வெற்றி பெற்றாலும் உள்ளாட்சித் தேர்தலில் சொந்த பெரும்பான்மை காட்டாமல் பின்னடவை சந்தித்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி... 

click me!