மாவட்ட கவுன்சிலரில் திமுக... ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக கெத்து... சம பலத்துடன் தேர்தல் முடிவுகள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 2, 2020, 3:58 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதல் நடைபெற்று வருகிறது. பல இடங்களில்  ரிசல்ட்டை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருவதகாவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

தற்போதைய நிலவரப்படி அதிமுக 92 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும், 315 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் பிடித்துள்ளது. பாமக 7 மாவட்ட கவுன்சிலர், 10 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியுள்ளது. தேமுதிக 2 மாவட்ட கவுன்சிலர், 11 ஒன்றிய கௌசிலர்க்ளை பெற்றுள்ளது.  பாஜக 3 மாவட்ட கவுன்சிலர்,  8 ஒன்றிய கவுன்சிலரை பெற்றுள்ளது.

 

அதேபோல திமுக 115 மாவட்ட கவுன்சிலர்களையும்,  298  ஒன்றிய கவின்சிலர் பதவிகளையும் பிடித்துள்ளது.  காங்கிரஸ் 5 மாவட்ட கவுன்சிலர், 12 ஒன்றிய கவுன்சிலர், மதிமுக 1 மாவட்ட கவுன்சிலர், 14 ஒன்றிய கவுன்சிலர், இந்திய கம்யூனிஸ்டு 6 மாவட்ட கவுன்சிலர், 11 ஒன்றியக் கவுன்சிலர், மா கம்யூனிஸ்டு 1 மாவட்ட கவுன்சிலர், 1 ஒன்றிஒய கவுன்சிலர் பதவிகளை பிடித்துள்ளது.  அமமுக 2 மாவட்ட கவுன்சிலர் 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பெற்றுள்ளது. 

இன்னும் பல இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருப்பதால் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் மெஜாரிட்டி காட்டும் என தெரியவில்லை. ஆனால், தற்போதைய நிலவரப்படி  மாவட்ட கவுசிலர் பதிகளில் திமுக 22 இடங்களில் அதிகமாக வெற்ற்பெற்றும் அதிமுக ஒன்றிய கவுசிலர் பதவியில் 24 இடங்களிலும் அதிகம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆக மொத்தத்தில் இருகட்சிகளும் சமபலத்தில் வெற்றிக்கனியை ருசித்துள்ளன.  

click me!