நாங்க ஆர்ப்பாட்டம் பண்ணோம்... நீங்க நீதிமன்றம் போய் நீதியை வாங்கிட்டீங்க... கமலை மனமுவந்து பாராட்டும் விசிக!

By Asianet TamilFirst Published May 9, 2020, 8:01 AM IST
Highlights

 "நாங்களெல்லாம்  அடைத்துகிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்! மூச்சுத் திணறும்போது கிடைக்கும்  ஆக்சிஜனின் அளவு சிறிதானாலும் பலன் மிகப்பெரிது!” என்று அதில் தெரிவித்துள்ளார். 

டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு வழக்கு தொடுத்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. டாஸ்மாக கடைகள்  திறப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிப்பான கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகள் திறக்க சென்னை இயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 3000க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 
ஆனால், பல இடங்களில் சமூக விலகல் இல்லாமலும், முண்டியடித்துக்கொண்டும் மது வாங்க கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருந்து மதுபானங்களை வாங்கினர். இதை எதிர்த்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “டாஸ்மாக் கடைகளில் விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்பது உறுதியாகிறது. இதே நிலை நீடித்தால் கொரோனா மேலும் வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. எனவே ஊரடங்கு முடியும் வரை கடைகளைத் திறக்கக் கூடாது” என்று கூறி நாளை முதல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. 
இந்தத் தீர்ப்புக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்திருந்தார். “இது MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி. #வெல்லும்தமிழகம்” என்று கமல் தெரிவித்திருந்தார்”


இந்நிலையில் கமலுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அக்கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புர்ம் எம்.பி.யுமான ரவிக்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாராட்டுகள் கமல்ஹாசன் சார். நாங்களெல்லாம்  அடைத்துகிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்! மூச்சுத் திணறும்போது கிடைக்கும்  ஆக்சிஜனின் அளவு சிறிதானாலும் பலன் மிகப்பெரிது!” என்று அதில் தெரிவித்துள்ளார். 

click me!