தேவியானேந்தலில் நாடகக் காதலால் கொலை செய்யப்பட்ட சரஸ்வதி குடும்பத்திற்கு விசிக ரூ.1 லட்சம் நிதியுதவி..!

By Thiraviaraj RMFirst Published Apr 20, 2021, 4:58 PM IST
Highlights

தாமதமாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தார். உதயநிதியும் கண்டனம் தெரிவித்தார். கொலை செய்தவர்கள் விடுதலை கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி (19) எனும் இளம்பெண், திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்காததால், இந்த மாதம் கடந்த 2-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அரசியல் தலைவர்கள் சிலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்

.

உளுந்தூர்பேட்டை, தேவியானந்தல் கிராமத்தை சார்ந்த சரஸ்வதி, 18 வயது நர்சிங் மாணவி காதலை தொடர மறுத்ததாக கூறி ரங்கசாமி கொலை செய்துள்ளதாகவும், ரவீந்திரன்,  கிருஷ்ணசாமி 2 பேரும் உடந்தை என்கிறார்கள். சரஸ்வதி வன்னியர் இனத்தை சேர்ந்தவர். திமுகவில் இருக்கிறார். இதனால் தாமதமாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தார். உதயநிதியும் கண்டனம் தெரிவித்தார். கொலை செய்தவர்கள் விடுதலை கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேவியானந்தல் சரஸ்வதியின் குடும்பத்தினரைச் சந்தித்து விசிக சார்பில் ரூ. ஒரு இலட்சம் இழப்பீடு வழங்கி ஆறுதல் கூறினார். கட்சியின் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களும் திமுக நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.
 

click me!