Breaking news: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு கொரோனா... அதிர்ச்சியில் கதர் சட்டைகள்..!

Published : Apr 20, 2021, 03:27 PM IST
Breaking news: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு கொரோனா... அதிர்ச்சியில் கதர் சட்டைகள்..!

சுருக்கம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று இருப்பதால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.   

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று இருப்பதால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். 

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மே ஒன்றாம் தேதியிலிருந்து தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தில் இந்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.  கொரோனா பரவல் தீவிரமடைவதால் மே.வங்கத்தில் நடைபெறவிருந்த தனது தேர்தல் பிரச்சார பேரணியை ரத்து செய்திருந்தார். இந்நிலையில்  கொரோனா தொற்று அறிகுறி தனக்கு இருந்ததாகவும் இதனால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று தனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகையால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் ட்விட் செய்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்