காலா காலி... விஸ்வரூபம் 2 விரட்டியடிக்க பிளான் போடும் கன்னட புலிகள்!... “நீங்க எப்போ வேணும்னாலும் வாங்க” வால் வைத்து மிரட்டும் வாட்டாள் நாகராஜ்!

First Published Apr 3, 2018, 4:41 PM IST
Highlights
vatal nagaraj waiting for protest against rajini kamal


நடிகராக மட்டும் இருந்தபோது காவிரி விவகாரத்தில் கருத்து சொன்னதற்காக ரஜினிக்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் 2008ஆம் ஆண்டு ரீலீசுக்கு தயாராக இருந்த‘குசேலன்’ படத்துக்கு ஏற்பட்ட சிக்கலால் பெங்களூர் சென்ற ரஜினிகாந்த் கன்னட சினிமா வர்த்தக சபை தலைவரைச் சந்தித்து வருத்தம் தெரிவித்துக் கடிதம் கொடுத்த பின் “குசேலன்” ரிலீஸ் ஆனது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்துவதற்கு எதிராகத் தமிழகமே போராட்டத்தால் அதிர்ந்துள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் விரைவில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" என ட்விட்டரில் கருத்து போட்டதால் காலா படத்திற்கு ஆப்படிக்காமல் விடமாட்டேன் என வாட்டள் நாகராஜ் வாள் வைத்துக் கொண்டு ரஜினி ரசிகர்களைப்போல ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் குசேலன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையைப் போல இப்போதும் பிரச்சனை பன்னல் என்ன செய்வது?  கொள்கை முக்கியம் என ரஜினி கருதினால் கர்நாடகாவிற்கு காலா படத்தை விற்காமல் நிறுத்திவிடலாம் என ரஜினிக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்களாம். கர்நாடகா வியாபாரம் 4 கோடி மட்டும் நஷ்டம் ஏற்படும்.

மாறாக, தன்னுடைய படம் வெளிவருவதற்காக கர்நாடக மக்களிடம் ரஜினிகாந்த் அப்போது கேட்டதுபோல இப்போதும் அதை செய்தால் அவருடைய படங்களை தமிழ்நாட்டில் ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற யாராலையும் முடியாது. அதுமட்டுமல்ல, சிஸ்டம் சரியில்லை, போர்வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி அரசியலில் இறங்கியிருக்கும் அவரது அவருடைய அரசியல் வாழ்க்கையும் ஆரம்பத்திலேயே சிக்கல்கலைச் சந்திக்கும்.

ரஜினிகாந்த்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது போலவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சினிமா என்பது வேறு அரசியல் என்பது வேறு என்பது  ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் இப்போது புரிந்திருக்கும்.

ஆனாலும் கமல்ஹாசன் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கடுமையான அரசியல் விமர்சனங்களை செய்துவருகிறார். ஆனால், ரஜினிகாந்த் இதுநாள் வரையிலும் பட்டும், படாமலும் பேசி வந்தார். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மாநில அரசை எதிர்த்து அவர் கருத்து சொன்னதும் அவருக்கு அதிகமான ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே மேலாண்மை வாரியம்  அமைத்தே ஆக வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்த பிரச்சனை இப்படி போய்கொண்டிருக்க கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர்கள், எந்தக் கருத்தையும் சொல்லிடாதீங்க தலைவா என ரஜினியிடம் வேண்டுகோள் வைத்துவிட்டார்கள்.

இந்த வேண்டுகோளை அடுத்து ரஜினிகாந்தும் தனது சகலை நடத்தம் நாடகத்துக்கு சென்றுவிட்டார்.  கமல்ஹாசன் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.
இருவர் மீதும் கர்நாடகாவில் அதிருப்தி நிலவ ஆரம்பித்துள்ளது.

அங்கு கர்நாடக எதிர்ப்பையும் இங்கு மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி இருவரும் அரசியல் செய்துவிடலாம். ஆனால், அவர்களது படங்களைத் திரையிட்டுவிட முடியுமா? அதை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்    என கன்னட சலுவாளி அம்மைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

click me!