திமுக முன்னாள் எம்.பி.வசந்தி ஸ்டான்லி காலமானார்… உடல்நலக்குறைவால் மரணம் !!

Published : Apr 28, 2019, 07:50 AM IST
திமுக முன்னாள் எம்.பி.வசந்தி ஸ்டான்லி காலமானார்… உடல்நலக்குறைவால் மரணம் !!

சுருக்கம்

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் திமுக எம்.பி. வசந்தி ஸ்டான்லி, மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்குவயது 57.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பிறந்தவர் வசந்தி ஸ்டான்லி. எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்ற பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் இவர். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வந்தார்.

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உயிர் பிரிந்தது.

கனிமொழியின் ஆதரவாளரான இவருடைய மரணம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசந்தி ஸ்டான்லி மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல திமுக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!