வசந்தகுமார் எம்.பி மறைவு...! மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது என்ன தெரியுமா..?

By manimegalai aFirst Published Aug 28, 2020, 8:57 PM IST
Highlights

இந்நிலையில் வசந்தகுமார் மறைவு குறித்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்து போராடும் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்படுவதும், அடுத்தடுத்து உயிரிழப்பதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதேபோல்  தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை. 

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்  கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடைய மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் எம்.பி.க்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வந்தனாகவும், அதே நேரத்தில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று மாலை 6.56 மணி அளவில் எச்.வசந்தகுமார் (70) உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்திலும் தனது தொகுதி மக்களுக்கு தொடர் நலத்திட்ட பணிகளை செய்து வந்த எச்.வசந்தகுமாரின் மரணம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்களை மட்டுமின்றி கன்னியாகுமரி தொகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் வசந்தகுமார் மறைவு குறித்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளதாவது, கொரோனா தீவிரம் காரணமாகவே திரு.எச்.வசந்த குமார் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அவருக்கு உயர் தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தற்போது மருத்துவமனை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!