மீண்டும் முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த வாசன்.. அதிமுகவுக்கு ஆதரவாக துள்ளி குதிப்பு.

Published : Aug 19, 2021, 12:22 PM ISTUpdated : Aug 19, 2021, 12:26 PM IST
மீண்டும் முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த வாசன்.. அதிமுகவுக்கு ஆதரவாக துள்ளி குதிப்பு.

சுருக்கம்

காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்யாமல் மக்களுக்கு ஆக்கபூர்வமான அரசியலை தமிழக அரசு செய்திட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.  

காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்யாமல் மக்களுக்கு ஆக்கபூர்வமான அரசியலை தமிழக அரசு செய்திட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். மறைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான ஜி.கே மூப்பனாரின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜி.கே மூப்பனாரின் திருவுருவ சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

முன்னதாக முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு ஜி கே மூப்பனாரின் பிறந்தநாளை விவசாய தினமாக கொண்டாடப்படுவதை யொட்டி மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி கே வாசன்; மறைந்த தனது தந்தையின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் விவசாய தினமாக கொண்டாடப் படுவது மட்டுமல்லாமல் பசுமையையும் விவசாயத்தையும் மதிக்கும் வண்ணம் அனைவரும் மரம் நட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர்அதிமுகவினர் மீது காழ்ப்புணர்ச்சி அரசியலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து விட்டதாகவும், 
காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்யாமல் மக்களுக்கு ஆக்கபூர்வமான அரசியலை தமிழக அரசு செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் வாசன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்த நிலையில், மீண்டும் அவர் இவ்வாறு கூறி உள்ளது குறிப்பிட தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!