என் பேச்சை கேட்டுதான் நடக்கணும்... காங்கிரஸின் நாட்டாமை... வண்டி வண்டியாய் குவியும் புகார்கள்..!

Published : Aug 19, 2021, 11:59 AM IST
என் பேச்சை கேட்டுதான் நடக்கணும்...  காங்கிரஸின் நாட்டாமை... வண்டி வண்டியாய் குவியும் புகார்கள்..!

சுருக்கம்

போன வாரம், ஒரு தரப்பினர் சென்னைக்கு போய், தலைமையிடமும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடமும், மாநில பிரமுகர் பற்றி வண்டி, வண்டியாக புகார் பட்டியலை வாசித்து விட்டு வந்து இருக்கிறார்கள். 

சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதில் காங்கிரஸ் சார்பில் தோலிவியை தழுவினார் அக்கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டு பாஜகவின் வானதி சீனிவாசன் அத்தொகுதியில் வெற்றி பெற்றார். 

கோவையில் இவரது அடாவடி போக்கால், இவருக்கு எதிராக ஒரு கோஷ்டி உருவாகி விட்டது. மாநில பொறுப்பில் இருக்கிற பந்தாவில், கட்சியில் யாரையும் மதிக்கிறதே இல்லை. ’என் பேச்சை கேட்டு தான் எல்லாரும் நடக்க வேண்டும்’என நாட்டாமை செய்து கொண்டு இருக்கிறார். ''இதனால், வெறுத்து போன பலரும் எதிர் கோஷ்டிக்கு தாவிவிட்டார்கள். மாவட்ட கட்சி அலுவலகத்துக்கான 'கரன்ட் பில்லை கூட, இப்போது எதிர் கோஷ்டியினர் தான் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 

போன வாரம், ஒரு தரப்பினர் சென்னைக்கு போய், தலைமையிடமும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடமும், மாநில பிரமுகர் பற்றி வண்டி, வண்டியாக புகார் பட்டியலை வாசித்து விட்டு வந்து இருக்கிறார்கள். 
 
PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!