பெட் கிடைக்கவில்லை எனக் கதறிய செய்தி வாசிப்பாளர் வரதராஜனின் நண்பர் மரணம்..!

Published : Jun 12, 2020, 04:56 PM IST
பெட் கிடைக்கவில்லை எனக் கதறிய செய்தி வாசிப்பாளர் வரதராஜனின் நண்பர் மரணம்..!

சுருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வரதராஜனின் நண்பர் தற்போது கொரோனாவுக்கு பலியாகி விட்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொலைக்காட்சி நடிகர் மற்றும் செய்தி வாசிப்பாளரான வரதராஜன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது நண்பர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு சென்னையில் உள்ள ஒருசில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெட் கிடைக்கவில்லை என்றும் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவின் விளைவு என்ன ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வரதராஜனின் நண்பர் தற்போது கொரோனாவுக்கு பலியாகி விட்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வரதராஜன் நண்பர் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சமையல் கலை வல்லுநர் செல்லப்பா என்றும் அவர் கிட்டத்தட்ட ஒரு கோடி கல்யாணத்திற்கு சமையல் செய்து உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

ஒரே நாளில் 50 திருமணத்திற்கு கூட சமைக்கக் கூடிய அளவுக்கு இவரிடம் திறமை மற்றும் வேலையாட்கள் உள்ளார்கள் என்பதும், எந்த ஒரு திருமணத்திலும் செல்லப்பாவின் சமையல் என்றால் திருமணத்தை நடத்துபவர்களும் திருமணத்திற்கு வருபவர்களும் மகிழ்ச்சியாக மனமார சாப்பிட்டு விட்டு செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

அப்படி ஒரு சமையல் சக்கரவர்த்தியாக இருந்த செல்லப்பா அவர்கள் கடந்த மே மாதம் வரை மிகவும் சுறுசுறுப்பாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா நோய் தாக்கியுள்ளது. இவரை அட்மிட் செய்யத்தான் வரதராஜன் உள்பட அவருடைய நண்பர்கள் சிலர் தீவிர முயற்சி செய்தனர். அதன் பின்னர் ஒரு வழியாக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதிலும் தற்போது சிகிச்சை பலனின்றி சமையல் செல்லப்பா காலமாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி வரதராஜனுக்கு மட்டுமின்றி சமையல் செல்லப்பாவின் சமையலை ருசித்த அனைவருக்குமே ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!