பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.!! உற்சாகத்தில் மகளிர் அணி...!

By T BalamurukanFirst Published Oct 28, 2020, 9:10 PM IST
Highlights

பாஜக மகளிர்அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.சீனியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக மகளிர்அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.சீனியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்கள், தேசியச் செயலாளர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டன. ஆனால் அந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒருவர் பெயர் கூட இல்லததால் அதிருப்தி நிலவிவந்த நிலையில், வானதி சீனிவாசனை மகளிரணி அணியின் தேசிய தலைவராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தாமரையை மலரச்செய்ய வேண்டும் என்று பாஜக முயற்சித்து வரும் வேளையில் தேசிய செயலராக இருந்த ஹெச்.ராஜா பதவி காலியான பிறகு மற்றவர்களுக்கு தேசிய அளவிலான பதவி வழங்கவில்லை. இது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தேசிய அளவிலான கட்சி பதவி வானதிசீனிவாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், “இந்த வாய்ப்பை வழங்கிய தேசிய தலைவர் ஜெபி நட்டாவுக்கு நான் முழு மனதுடன் நன்றிக்கூற விரும்புகிறேன். மகளிரணி தேசிய தலைவராக என்னை நியமித்ததற்கு கட்சிக்கு நன்றி கூறுகிறேன்.கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எல் சந்தோஷ்ஷின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதங்களால் தேசத்திற்கு சேவை செய்வதற்காக அயராது உழைப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

click me!