கார்கில் நாயகன் "வாஜ்பாய்"..! எதிரிகளை துண்டக் காணோம் துணிய காணோம் என ஓட விட்டது எப்படி..?

By thenmozhi gFirst Published Aug 16, 2018, 8:41 PM IST
Highlights

ஸ்ரீநகரையும் - லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கார்கில் வழியாக செல்கிறது. அதாவது தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இங்கு தான் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் உள்ளன.

இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம். ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது  இந்த நகரம்.

கார்கில்:

ஸ்ரீநகரையும் - லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கார்கில் வழியாக செல்கிறது. அதாவது தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இங்கு தான் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் உள்ளன.

இரவும் பகலுமாக கண் விழித்துக் கொண்டு நாட்டையே பாதுகாத்து வந்த வீரர்கள் இங்கு தங்கி தான் தாய் நாட்டை காத்தனர். ஆனால் பாகிஸ்தானுக்கு எப்போதுமே இந்தியா மீது ஒரு குறி வைத்துக்கொண்டே  இருக்கும். கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கலாம் என்பது பாகிஸ்தானின் பெரிய கனவு.

இதற்காக பல திட்டங்கள் போட்ட பாகிஸ்தான், பலமுறை தோல்வி அடைந்து உள்ளது. மேலும் அப்போது ஜியா உல் ஹக், பெனாசிர் பூட்டோ ஆகியோர் அதிபர்களாக இருந்தனர். இவர்கள் இந்த திட்டத்திற்கு அனுமதி தர மறுத்து விட்டனர்.  

இதற்கு முன்னர் 971–ல் நடந்த போரில் பட்ட அனுபவம் அந்த வரலாறு மனதில் ஒரு ஓரமாய் நீங்கா வடுவாக தான் இருந்தது. இந்லையில், 1990–களில் பாகிஸ்தான் தூண்டுதலோடு காஷ்மீரில் தீவிர வாத  தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் ஒரு விதமான பதற்றம் நிலவி கொண்டு இருந்தது. இப்படியே சில ஆண்டுகள் செல்ல பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே உருவான பதற்றத்தை குறைக்க, 999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அன்றைய பிரதமர் வாஜ்பாய் செய்தது என்ன..?

அப்போதைய பிரதமரராக  இருந்த வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு பஸ் பயணத்தை தொடங்கி வைத்து லாகூருக்கு பஸ்சில் சென்று வந்தார். ஆனால் பாகிஸ்தான் விடுவதாக இல்லை. 1999–ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தனர். படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.   

130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர். குறிப்பாக முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி, சியாசின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்தி விட்டன. இந்திய ராணுவ நிலைகளை கைப்பற்றியதோடு புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்து விட்டனர். 


 
இதனை தொடர்ந்து, உஷார் அன ராணுவத்தினர் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றனர். அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர். பின்னர் கார்கில் ராணுவ கிடங்கை குறி வைத்து குண்டு வீசப்பட்டதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. 

களம் இறங்கிய வாஜ்பாய்

அன்புக்கரம் நீட்டிய இந்தியா, பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரெடியான வாஜ்பாய், போர் பிரகடனப்படுத்தினார். அந்த  சமயத்தில் அதாவது, 1998– ஆம் ஆண்டு தான் 2–வது முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகிற்கே சவால் விடுத்தது  இந்தியா. இந்த தருணத்தில் தான் சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது போல, இந்தியாவை சீண்டி பார்த்து விட்டது பாகிஸ்தான். 
 
தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது இந்தியா.

தாய் நாட்டை காக்க உயிரை துச்சமென மதித்து இளம் இந்திய சிங்க குட்டிகள் மலை முகடுகளில் துள்ளி குதித்தன. சிறு சிறு குழுக்களாக வெறும் 30 ஆயிரம் வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தார்கள். கராச்சி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது நமது கடற்படை. ஒரு புறம் பெருளாதார சிக்கல். இன்னொரு புறத்தில் போர் நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. 

ராணுவத்துக்கு 6 நாட்களுக்குத்தான் எரிபொருள் இருந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் அலறியது. இவ்வாறு கார்கில் போரில் வெற்றி பெற முழு முதற்காரணமாக இருந்த பிரதமர் வாஜ்பாய்  இந்தியாவின் பல வெற்றி திட்டங்களுக்கு மட்டுமல்ல... பல வெற்றிக்கு முக்கிய  காரணமாக  இருந்தவர்.

இந்தியாவின் பொருளாதார வளர்சிக்கும் ஒரு ஆணிவேராக இருந்தவர் தான் பிரதமர் வாஜ்பாய் அவர்கள். 

click me!