சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசி வாங்கிய தலைகனம் இல்லா மாமனிதர் வாஜ்பாய்!

By sathish kFirst Published Aug 16, 2018, 8:37 PM IST
Highlights

மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசி வாங்கினார் தலைகனம் இல்லா மாமனிதர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.

தன் வாழ்வையே நாட்டுக்காக, கோடானு கோடி மக்களுக்காக அர்ப்பணித்து, தனக்கென்று ஒரு இல்லற வாழ்வை அமைத்துக்கொள்ளாத உத்தமத் தியாகி  மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசி வாங்கினார் தலைகனம் இல்லா மாமனிதர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.

புல்லு  களஞ்சியம்’ எனும் பெயரில்  ஒரு சிறிய மகளிர் சுய  உதவிக் குழுவைத் தொடங்கி, அதன் மூலம் பல விழுதுகளை உருவாக்கிக்கொண்டு இருப்பவர் மதுரை 'சின்னப்பிள்ளை’. இவருடைய சேவைக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கையால் விருது பெற்றவர். விருதைவிட பிரதமரே காலில் விழுந்து வணங்கினார்.

மதுரை அழகர் கோவிலை சேர்ந்தவர் சின்ன பிள்ளை. கிராமபுற பெண்களின் மேம்பாட்டிற்காக இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு களஞ்சியம் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்தில் முதலில் 10 பேர் இருந்தனர். தற்போது 9 மாநிலங்களில் 4 லட்சம் பேர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு மூலம் கிராமபுற பெண்கள் பெரிதும் பயன் பெறுகிறார்கள்.

இவரது சமூக சேவையை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாராட்டி அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்பதை பொக்ரான் சோதனையின் மூலம் உலகத்துக்கு நிருபித்தார் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைகனம் இல்லா மாமனிதர்.

click me!