திமுக ஆட்சியைக் காக்க தனது பதவியை துச்சமென தூக்கி எறிந்தவர் வாஜ்பாயி… மு.க.ஸ்டாலின் புகழாரம் !!

By Selvanayagam PFirst Published Aug 17, 2018, 8:21 AM IST
Highlights

இந்தியாவின் மகுடமாக விளங்கும் தங்க நாற்கர சாலை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிய செயல் வீரர் வாஜ்பாயி எனவும் திமுக ஆட்சியைக் காக்க தனது பதவியை துச்சமென தூக்கி எறிந்தவர்  வாஜ்பாயி என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு திமுக சார்பில் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தாயநிதி மாறன் மற்று திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்டர்

பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள்  ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வாஜ்பாய் உடலுக்கு இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய  ஸ்டாலின், ’கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர் வாஜ்பாய் அவரது மறைவு வருத்தமளிக்கிறது. தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்ற நிலை வந்த போதும் அரசியல் சாசனத்தை காத்தவர் வாஜ்பாய். அவரது மறைவினால் நாட்டு மக்கள் அடைந்துள்ள துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன்’ என தெரிவித்தார்.

click me!