வாஜ்பாயி செமையா சமைப்பார் தெரியுமா ? நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் மன்னன் இந்த வாஜ்பாயி !! ருசிகர தகவல்கள் …

By Selvanayagam P  |  First Published Aug 17, 2018, 7:24 AM IST

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி ஒரு நல்ல உணவிப் பிரியர் என்பதும், அவர் மிக நான்றா சமையல் செய்வார் என்தும் யாரும் அறிந்திரா புதிய ருசிகரமான தகவல். நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் அவர் ஒரு குழந்தையைப் போன்றவர் என மிகுந்த உருக்கத்துடன் தெரிவிக்கின்றனர் அவருடன் மி க நெருக்கமாக இருந்தவர்கள்.


இது குறித்து அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் பல ருசிகர தகவல்கள் தற்போது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். மத்திய அமைச்சரவைக்  கூட்டங்களில் கூட வாஜ்பாய் உப்புக்கடலையை கொறித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு தடவையும் தட்டு நிறைய அதை நிரப்பி வைக்க வேண்டும். கூட்டம் முடிவடையும்போது, தட்டு காலியாகி இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

Tap to resize

Latest Videos

undefined

வாஜ்பாய்க்கு இனிப்புகளும், கடல் உணவுகளும் குறிப்பாக இறால் மிகவும் பிடிக்கும். எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் புகழ்பெற்ற உணவு வகைகளை கேட்டு வாங்கி சாப்பிடுவார். வாஜ்பாயின் சீடரான லால்ஜி தாண்டன், லக்னோவில் இருந்து எப்போது டெல்லி வந்தாலும் கபாப் உணவு வகைகளை வாங்கி வந்து தருவார்.

மத்திய அமைச்சர் விஜய் கோயலுக்கு பழைய டெல்லியில் இருந்து சாட் உணவுவகைகளை வாங்கி வரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.



தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திராவில் இருந்து இறால் வாங்கி வருவார். ஏராளமான மசாலாவுடன் பக்கோடா சாப்பிடுவதும், மசாலா டீ அருந்துவதும் வாஜ்பாய்க்கு பிடித்தமான விஷயம்.

ஒருமுறை அரசாங்க விருந்தின்போது, உணவு பகுதியில், குலாப் ஜாமுன் உள்ளிட்ட இனிப்பு வகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்தவுடன் , வாஜ்பாய் அந்த பகுதிக்கு சாப்பிடுவதற்காக அங்கே செல்லத் தொடங்கினார்.
அதை பார்த்து அதிர்ச்சி  அடைந்த அதிகாரிகள், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மாதுரி தீட்சித்தை வாஜ்பாய்க்கு அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு மாதுரி தீட்சித்துடன் திரையுலகம் குறித்து வாஜ்பாய் உரையாடத் தொடங்கினார். அந்த இடைவெளியில், இனிப்பு வகைகளை அங்கிருந்து மறைத்து விட்டனர் அந்த  அதிகாரிகள்.
 


வாஜ்பாய்க்கும் நன்றாக சமைக்கத் தெரியும். தன்னை சந்திக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு அவரே ஏதேனும் ஒரு உணவுவகையை சமைத்து வழங்குவார். அது பெரும்பாலும் இனிப்பு வகையாகவோ அல்லது அசைவமாகவோ இருக்கும் .
தற்போத உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட வாஜ்பாய் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர். 

click me!