ஓ இதுதான் விஷயமா? ஓபிஎஸ் மீது அதிருப்தியில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்? ஜெயக்குமார் அதிர்ச்சி தகவல்.!

Published : May 09, 2023, 02:27 PM ISTUpdated : May 09, 2023, 02:29 PM IST
ஓ இதுதான் விஷயமா? ஓபிஎஸ் மீது அதிருப்தியில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்? ஜெயக்குமார் அதிர்ச்சி தகவல்.!

சுருக்கம்

நேற்றைய சந்திப்பின் போது ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளான வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

டிடிவி.தினகரனை நேரில் சென்று சந்தித்த விவகாராத்தில் ஓபிஎஸ் மீது அவருடன் இருக்கும் ஒரு சிலரே அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த 2017ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு வலது கரமாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் கே.பி.முனுசாமி, செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள். ஆனால், அன்று வைத்தியலிங்கம் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தார். பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தது. இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, ஓபிஎஸ் தனி அணியாகவும், இபிஎஸ் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;- கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு.. பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்..!

அன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது வலது கரமாக இருந்து வந்த கே.பி.முனுசாமி உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக உள்ளனர். அதேபோல், இபிஎஸ் பக்கம் இருந்து வந்த வைத்தியலிங்கம் ஓபிஎஸ் ஆதரவாளராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த எந்த நேரத்திலும் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருந்தன. இதனை பல பேட்டியில் ஓபிஎஸூம் கூறிவந்தார். 

இதையும் படிங்க;-  உருட்டுவது பூனைகுணம்! கெடுப்பது குரங்கு குணம்! கொல்வது முதலை குணம்! OPS-TTV சந்திப்பு! ஜெயக்குமார் விளாசல்.!

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் திடீரென அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். நேற்றைய சந்திப்பின் போது ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளான வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. தேனி மாவட்ட செயலாளர் சையது கான் மட்டுமே உடன் இருந்தார். இதனால், இவர்கள் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது;- டிடிவி.தினகரனை நேரில் சென்று சந்தித்த விவகாராத்தில் ஓபிஎஸ் மீது அவருடன் இருக்கும் ஒரு சிலரே அதிருப்தியில் இருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். அந்த சிலர் என்பது வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!