வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பிற்கு பொதுமக்கள் அனுமதி இல்லை.. பார்த்தசாரதி கோயில் அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jan 6, 2022, 5:41 PM IST
Highlights

வரக்கூடிய பொதுமக்களுக்கு முக கவசம் அணிதல், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், சனிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் கூறினார். 

இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  சொர்க்கவாசல் திறப்பிற்கு பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.சென்னை பார்த்தசாரதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 13 ஆம் தேதி பொதுமக்கள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை அரசின் நிலையான வழிகாட்டுதலை பின்பற்றி தரிசனம் மேற்கொள்ளலாம் என்றும் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தோற்று வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி  2500 க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 121 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில்  தமிழகம் முழுவதும்  கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு  முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்

வருகிற 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று திருக்கோயில்களில் கொண்டாடப்பட உள்ளதால், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளை துணை ஆணையர் கவனிதா செய்தியாளர்களை சந்தித்து  வெளியிட்டார். அப்போது  பேசிய அவர், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் , உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் , சுவாசப் பிரச்சினைகள் இருப்பவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடல் நலனை கருத்தில் கொண்டு தரிசனம் செய்ய வரவேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுத்தார். 

வரக்கூடிய பொதுமக்களுக்கு முக கவசம் அணிதல், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், சனிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் கூறினார். மேலும் 13 ஆம் தேதி  வைகுண்ட ஏகாதேசியொட்டி சொர்க்கவாசல் திறப்பிற்கு பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லலை என்றும், 13 ஆம் தேதி பொதுமக்கள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை அரசின் நிலையான வழிகாட்டுதலை பின்பற்றி தரிசனம் மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் கூறினார். 
 

click me!