ஜெயலலிதா வீட்டை வாடகைக்கு கேட்டு கெஞ்சும் சசிகலா..? கடவுள் இருக்றான் குமாரு! என கலாய்க்கும் அ.தி.மு.க..!

By Ganesh RamachandranFirst Published Jan 6, 2022, 5:23 PM IST
Highlights

"இந்தம்மா யாருன்னு நமக்கு தெரியும். அத்தை உயிரோட இருந்த வரைக்கும் இந்த லேடி நம்மை அவங்களை நெருங்கவே விடலை"

தமிழகத்தின் சீனியர் அரசியல் விமர்சகர் ஒருவர் அழகாக எழுதினார்….’தன் முன் கைகட்டி நின்ற கட்சி நிர்வாகிகள் தன்னைப் பார்த்து நடுநடுங்குவதாய் நினைத்து ஜெயலலிதா கர்வப்பட்டார். ஆனால் அவர்கள் நடுங்கியது அவரது நிழலையும் பார்த்துதான்! அந்த நிழல்தான் சசிகலா’ என்று. விமர்சகரின் இந்தப் பார்வையை தவறென்று ஒதுக்கவே முடியாது. ஏனென்றால், அதுதான் உண்மை.

ஜெயலலிதாவுக்கு நிகராக அல்லது அவருக்கே தெரியாமல், அவரை விட ஒரு படி மேலாகத்தான் அக்கட்சியில் அதிகாரத்தை வைத்திருந்தார் சசிகலா. ஜெயலலிதாவின் வீட்டுக்கு டீ பாத்திரம் வாங்குவதில் துவங்கி அ.தி.மு.க.வின் தேர்தல் கூட்டணி வரையில் எல்லாமே சசி வைத்ததுதான்  வரிசை. இவர் மற்றும் இவர் தலைமையிலான மன்னார்குடி வகையறாவினர் செய்த உள் அரசியலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்களாம் அ.தி.மு.க.வினர்.

அதனால்தான் சசிகலா அண்ட்கோவை வீட்டை விட்டு ஜெயலலிதா வெளியேற்றியபோது அக்கட்சியே ஆர்ப்பரித்து அடங்கியது. திருப்பூரில் தொண்டர்கள் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றியதெல்லாம் இதற்கான வேற லெவல் ஆதாரங்கள்.

ஜெயலலிதா சினிமாவில் உழைத்துக் களைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய வீடுதான் சென்னை போயஸ்கார்டனில் இருக்கும் வேதா இல்லம். இந்த வீட்டில் முதலில் தன் அம்மாவோடு வாழ்ந்த ஜெயலலிதா, அவரது மறைவுக்குப் பின் தனித்து வாழ்ந்தார். பின் சசிகலா அவருக்கு நெருக்கமான பின் அந்த வீட்டில் தங்க துவங்கினார். பின் அந்த வீட்டில் அவரது அண்ணி இளவரசி, அவரது மகன் விவேக் என்று ஆரம்பித்து மன்னார்குடி குடும்ப வகையறாக்களின் ஆக்கிரமிப்பு அதிகமானது. அதேப்போல் அ.தி.மு.க.வை ஜெயலலிதா ஆண்டபோது, இணையரசியாக சசிகலாவும் ஆண்டார் என்பது வரலாற்று உண்மை.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் சசிகலா சிறை சென்றார். எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியும், கட்சியும் சசியை அப்புறப்படுத்தியதோடு, மீண்டும் அவர்  ஆட்சி மற்றும் கட்சிக்குள் வரும் அத்தனை வழி வாய்க்கால்களையும் அடைத்தனர். குறிப்பாக, ஜெயலலிதாவோடு சசிகலா கோலோச்சிய போயஸ்கார்டன் பங்களாவை அரசுடமையாக்கி, அதை நினைவில்லமாக்கினர். இந்த நடவடிக்கைக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றார் ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் வந்த இந்த வழக்கின் தீர்ப்பின் படி அந்த பங்களாவானது ஜெ.,வின் வாரிசுகளான தீபா மற்றும் அவரது தம்பி தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க.வினுள் மீண்டும் நுழைந்து அதை கையகப்படுத்தும் மூவ்களில் இருக்கும் சசிகலா, தொண்டர்களை ஈர்க்கும் சென்டிமெண்ட் பிளானாக முதலில் போயஸ்கார்டன் வீட்டுக்குள் குடியேற நினைக்கிறார். ஆனால் அது சட்டப்படி தீபா மற்றும் தீபக்கின் சொத்தல்லவா! அதனால், தன்னை நம்பும் தீபக் மூலமாக அவரது அக்கா தீபாவிடம் பேசி, போயஸ் வீட்டின் சில அறைகளை தனக்கும், இளவரசிக்கும் வாடகைக்கு விடச்சொல்லி கேட்டிருக்கிறாராம். ‘அக்கா வாழ்ந்த வீட்டுல என்னோட மீதி வாழ்க்கையை வாழ்ந்துட்டு போயிடுறேன் தீபா. அது உன் வீடுதான், ஆனால் நாங்க அங்கே அக்காவோடு எப்படி வாழ்ந்தோமுன்னு உனக்கே தெரியும். நான் வாடகைக்குதான் அதை கேக்குறேன். ப்ளீஸ் கொடும்மா தீபா. அத்தனை அறைகளும் எனக்கு வேண்டாம். சிலது மட்டும் போதும், மற்றதை நீயும் உன் தம்பியும் எப்ப வேணா வந்து பயன்படுத்திக்கோங்க.’ என்று கேட்டு கோரிக்கை வைத்துள்ளாராம்.

சசிகலாவின் டீலுக்கு தீபக் ரெடியாம். ஆனால் தீபாவோ ‘இந்தம்மா யாருன்னு நமக்கு தெரியும். அத்தை உயிரோட இருந்த வரைக்கும் இந்த லேடி நம்மை அவங்களை நெருங்கவே விடலை. இப்ப நம்ம கிட்ட கெஞ்சி, வீட்டுக்குள்ளே குடிவரவிட்டுட்டா, அப்புறம் வீட்டையே ஆக்கிரமிச்சுடுவாங்க.’ என்று  யோசித்து, வாடகைக்கு தர மறுக்கிறாராம்.

இந்நிலையில், போயஸ்கார்டன் தெரு முனைக்கு கூட தங்களையெல்லாம் வர விடாமல் தடுத்த சசிகலா, இன்னைக்கு அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறுவதற்காக தீபாவிடம் கெஞ்சுவதை கேள்விப்பட்டு ‘கடவுள் இருக்றான் குமாரு. அதனாலதான் அந்தம்மா செஞ்ச தப்புக்கு, இப்ப இப்படியெல்லாம் கெஞ்ச விடுறான்’ என்று பஞ்ச் அடிக்கின்றனர் அதிமுகவினர்.

ஆஹாங்!

click me!