20 வருடங்களுக்கு பின் மீண்டும் கால் வைக்கிறார் தலைவன் வைகோ!! மாநிலங்களவை உறுப்பினராவது உறுதி!!

By sathish kFirst Published May 23, 2019, 5:50 PM IST
Highlights

கூட்டணி ஒப்பந்தத்தின் படி மாநிலங்களவை உறுப்பினராகி விரைவில் நாடாளுமன்றத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு காலடி எடுத்து வைக்க இருக்கிறார் தலைவன் வைகோ. 

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

மேலும், கூட்டணியில், காங்கிரஸ் 10 தொகுதியிலும், திமுக 20 தொகுதியிலும் போட்டியிட உள்ளது. மற்ற கூட்டணி கட்சியினருக்கு தலா 2 தொகுதியும் ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுகாவுக்கு 1 தொகுதியும் கொடுக்கப்பட்டது. பல வருஷமா கட்சியை நடத்தி வரும் எங்க கட்சிக்கு ஒரு சீட்டா?  பாரிவேந்தரும் நாங்களும் ஒண்ணா? என கேட்கும் அளவிற்கு பயங்கர கோபத்தில் கொந்தளித்தது.

ஆனால், திமுகவின் கணக்கோ பிரசார பீரங்கியாக இருக்கும் வைகோவிற்கு ஒரு சீட் மட்டும் கொடுத்தது, காரணம் தேர்தல் பிரசாரம் மற்றும் இடைத்தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்திற்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக, ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அந்த ஒரு தொகுதியையும், தனது கட்சியின் மூத்த நிர்வாகியான கணேசமூர்த்திக்கு கொடுத்துவிட்டு, தான் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வாங்க பிளான் போட்ட வைகோவின் பிளான் இம்ப்ளீமென்ட் பண்ணும் நாள் நெருங்கிவிட்டது.  

ஆமாம், தலைவன் வைகோவின் கட்சி வேட்பாளர் ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனை அசால்ட்டாக அட்ச்சி தூக்கி வெற்றிபெற்றுள்ள நிலையில், மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்த வைகோ. சுமார் 18 வருஷம் மக்களவை மாநிலங்களவை என அதகளம் செய்து வந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் வாங்கி ஒரு சீட்டையும் அசால்ட்டாக ஜெயித்துவிட்டு, ஏற்கெனவே போடப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின் படி மாநிலங்களவை உறுப்பினராகி விரைவில் நாடாளுமன்றத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு காலடி எடுத்து வைக்க இருக்கிறார் தலைவன் வைகோ. 

click me!