
ஆட்டோவில் பயணித்த வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் காவிரி மேலான்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்தில் இடம் ஒதுக்கியதை கண்டித்தும் பெரும் கண்டன குறை கொடுத்து வருகிறார்
தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்,விவசாயத்தை மீட்க வேண்டும் என பெரும்பாடு பட்டு வருகிறார் வைகோ.
இதற்காக மத்திய அரசை கண்டித்து அறிக்கை மேல் அறிக்கை விட்டும், நடந்தே பேரணி சென்றும் அவரது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில்,தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அவரை சந்திக்க வைகோ செல்ல இருந்தார்.
ஆனால் அவரது கார் வேறொரு வேலையாக சென்றிருந்ததால் அவசரம் கருதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணாநகரிலிருந்து ஆர்.கே.சாலையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு ஆட்டோவில் சென்றார்.