"புதிய ரூபாய் நோட்டுக்கள் மூலம் இந்தியை திணிப்பதா?" - வைகோ கடும் கண்டனம்

Asianet News Tamil  
Published : Nov 14, 2016, 05:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
"புதிய ரூபாய் நோட்டுக்கள் மூலம் இந்தியை திணிப்பதா?" - வைகோ கடும் கண்டனம்

சுருக்கம்

இதுகுறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த மூன்று நாட்களாக சாதாரண மக்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை மாற்ற இயலாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோடானு கோடி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் வங்கிகள் திணறிக்கொண்டு இருக்கின்றன.

மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் இதில் தீவிர கவனம் செலுத்தி முறையாக திட்டமிட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய நடைமுறையாக, இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய 500, 2000 ரூபாய் தாள்கள் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டு, தேவநாகரி வடிவ இந்தி எண் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அச்சிடும் ரூபாய் தாள்களில் பன்னாட்டு வழக்கில் உள்ள எண்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்ட விதி 343 கூறுகிறது.

அரசியல் சட்ட விதி 343 பிரி 1 இல் உரிய திருத்தங்கள் செய்தால் மட்டுமே புதிய ரூபாய் தாள்களில் இந்தி எண்ணை பயன்படுத்த முடியும். ஆனால் மோடி அரசு, புதிய ரூபாய் தாள்களில் இந்தி எண்ணைப் பொறித்து இருப்பது அரசியல் சட்டத்தையே மதிக்காத செயல் ஆகும். இது நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என குற்றம்சாடியுள்ளார்.

கறுப்புப் பணம் ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையின் நோக்கம், புதிய ரூபாய் தாள்களில் இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பில் போய் முடிந்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ள புதிய ரூபாய் தாள்களில் பழைய முறைப்படி ரூபாய் மதிப்பு எண்ணை அச்சிட வேண்டும் அல்லது அனைத்துத் தேசிய இனங்களின் மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!