தமிழ்நாட்டு விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற மாபெரும் சதி!! மோடியின் பலே பிளான்

First Published Mar 11, 2018, 10:36 AM IST
Highlights
vaiko reveals prime minister modi plan


காவிரி இறுதி தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் என குறிப்பிடாமல், காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தை மேலாண்மை செய்ய திட்டம் வகுக்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பின் அந்த பகுதியை சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதில் தெளிவாக இருப்பதாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

தமிழ்நாட்டின் காவிரி நீர்ப்பங்கை குறைத்தது, காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடாதது ஆகிய காரணங்களுக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வை வைகோ கடுமையாக விமர்சித்துவருகிறார். தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என குற்றம்சாட்டிவருகிறார்.

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மட்டுமே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் இல்லை. அதைத்தாண்டிய காரணமும் உண்டு. தமிழ்நாட்டில் விவசாயத்தை அழித்து விவசாய நிலங்களை இன்னும் 10 ஆண்டுகளில் அடிமாட்டு விலைக்கு கார்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கான நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதற்காகத்தான் தொடர்ச்சியாக தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி, இறுதியில் வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களை விற்கப்பட வேண்டும். இதுதான் மோடியின் திட்டம் என வைகோ பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
 

click me!