பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கதறிய வைகோ..!! அவரச கடிதம்..!!

Published : Oct 12, 2020, 02:14 PM IST
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கதறிய வைகோ..!! அவரச கடிதம்..!!

சுருக்கம்

அவர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டதாக, அவருடன் வேலை செய்கின்ற ஒருவர், இரண்டு நாள்களுக்கு முன்பு, அலைபேசியில் தகவல் கூறி இருக்கின்றார். 

தென்காசியை சேர்ந்த ராணுவ வீரரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து விசாரித்து, உடனே அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் குறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. 

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முல்லைராஜ் என்ற இளைஞர், இந்தியப் படையில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற இடத்தில் பணிபுரிந்து வருகின்றார். அவரது அடையாள எண் 2621258.அவர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டதாக, அவருடன் வேலை செய்கின்ற ஒருவர், இரண்டு நாள்களுக்கு முன்பு, அலைபேசியில் தகவல் கூறி இருக்கின்றார்.  

அதன்பிறகு, அந்த அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தியப் படையில் இருந்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அவரது தாயார் அழகாத்தாள், இதுகுறித்து எனக்கு எழுதி இருக்கின்ற கோரிக்கை விண்ணப்பத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். 

 

முல்லைராஜ் இருப்பு மற்றும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து, உரிய தகவல் கிடைக்க உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ தமது மின் அஞ்சல் கடிதத்தில் கேட்டுக்கொண்டு இருக்கின்றார். மேலும் அவர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார்.என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!