
சென்னை கொடுங்கையூரில் மழையின் போது பராமரிப்பின்றி கிடந்த மின் சாதனம் மூலம் மின்சாரம் தாக்கி பலியான சிறுமிகளின் குடும்பத்தினரை
மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கொடுங்கையூர், ஆர்.ஆர். நகரில் வீட்டு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ என்ற இரண்டு சிறுமிகள், மின்சார வயர் நீரில் பட்டதால்,
அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்காமல் அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என்றும் அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் வியாசர்பாடி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுமிகள் உயிரிழந்தது குறித்து கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமிகளின்
குடும்பத்தாருக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினரை, மேதிமுக பொது செயலாளர் வைகோ, இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.