
கடந்த 2009ம் ஆண்டு வைகோ மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 3ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, வைகோவை 15 நாள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், அவர் ஜாமீனில் செல்ல விரும்பினால், செல்லலாம் என நீதிபதி கூறினார்.
அதற்கு, மறுப்பு தெரிவித்த வைகோ, சிறைச்சாலைக்கு செல்வதாக கூறினார். இதையடுத்து, அவர் புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 15 நாட்கள் சிறை காவலில் இருந்த வைகோ இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டுள்ளார்.
நீதிபதியின் விசாரணை முடிந்த பின்னர், அவர் ஜாமீன் பெற்று வீட்டுக்கு செல்வாரா அல்லது மீண்டும் சிறை காவலில் வைக்கப்படுவாரா என்பது தெரியவரும் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.