கூட்டணி மேட்டரில் அசிங்கப்படுத்திய திமுக! பிபி குறையாமல் டென்ஷனில் தவிக்கும் வைகோ!

By sathish kFirst Published Nov 28, 2018, 7:52 AM IST
Highlights

தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இல்லை என்று துரைமுருகன் கூறிய போது ஏறிய பி.பி வைகோவுக்கு தற்போது வரை குறையவில்லை என்கிறார்கள்.

ஆறு மாதங்களுக்கு முன்னரே தி.மு.க கூட்டணியில் இணைந்துவிட்டதாக வைகோ பேட்டி அளித்தார். மேலும் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்காமல் ஓயப்போவதில்லை என்றும் வைகோ பிரகடனம் செய்தார். ஆனால் கூட ஸ்டாலின் அப்போது முதல் இப்போது வரை ம.தி.மு.க விவகாரத்தில் ஒரு அடி தள்ளியே நிற்கிறார். ம.தி.மு.க நடத்திய மாநாட்டில் கூட கலந்து கொள்ளாமல் துரைமுருகனையே அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.

மேலும் கூட்டணி குறித்து காங்கிரஸ், இடதுசாரி தலைவர்களை தனது வீட்டுக்கே அழைத்து பேசிய ஸ்டாலின், வைகோவை தற்போது வரை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தான் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த துரைமுருகன், தங்கள் கூட்டணியில் ம.தி.மு.கவும் இல்லை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் இல்லை என்று தடாலடியாக கூறியுள்ளார்.

துரைமுருகனின் இந்த பேட்டி ஒளிபரப்பான போது வைகோ பார்க்கவில்லையாம். ஆனால் பேட்டியை பார்த்த ம.தி.மு.க நிர்வாகிகள் வரிசையாக வைகோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். முதலில் துரைமுருகன் பேட்டியை வைகோ சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. துரைமுருகன் எதாவது டைமிங் காமெடி அடித்திருப்பார் என்றே அருகாமையில் இருந்தவர்களிடம் கூறிக் கொண்டு இருந்திருக்கிறார் வைகோ.

பின்னர் துரைமுருகனின் பேட்டியை அந்த தொலைக்காட்சி யூட்யூபில் பதிவேற்றியது. அதனை நிர்வாகிகள் சிலர் வைகோவிடம் காட்டியுள்ளனர். அந்த பேட்டியை முழுமையாக பார்த்த பிறகு தான் வைகோவுக்கு பி.பி எகிறியுள்ளது. நான் கூட ஏதோ விளையாட்டுக்கு சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால் சீரியசாகவே துரைமுருகன் பேசியிருக்கிறார் என்று கன்னா பின்னாவென்று பேசியுள்ளார் வைகோ. 

உடன் இருந்தவர்கள் சமாதானப்படுத்திய நிலையில் பாதி இரவு வரை நிர்வாகிகளுடன் துரைமுருகன் பேட்டி குறித்தே ஆலோசித்து வந்துள்ளார் வைகோ. மறுநாள் காலையில் தான் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருக்கிறதா இல்லையா என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.  அதன் பிறகாவது தனக்கு அழைப்பு வரும் என்று வைகோ காத்திருந்தார்.

ஆனால் வைகோவுக்கு தி.மு.க தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கடும் கோபத்தில் இருந்த வைகோ ஒரு நாள் முழுவதும் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மிகவும் டென்சனாகவே இருந்துள்ளார். அப்படித்தான் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சென்று கடலில் இறங்கி ஏதேதோ சபதம் எல்லாம் செய்துள்ளார்.

வைகோவின் டென்சனை எப்படி குறைப்பது என்று தெரியாமல் சக நிர்வாகிகளும், உதவியாளர்களும் விழி பிதுங்கிப் போய் இருக்கின்றனர். தி.மு.க தரப்பில் இருந்து சாதகமான ஏதேனும் பதில் வந்தால் தான் வைகோ சமாதானம் ஆவார்கள் என்கிறார்கள். இந்த நிலையில் தான் ஸ்டாலின் தரப்பிடம் இருந்து வைகோவுக்கு அழைப்பு சென்றுள்ளது.இதனை தொடர்ந்து இன்று மாலை அறிவாலயத்தில் ஸ்டாலினை வைகோ சந்திக்க உள்ளார்.

click me!