"ஜெயலலிதா ஆத்மா ஓ.பி.எஸ்.சை ஒரு போதும் மன்னிக்காது" - வைகைச்செல்வன் ஆவேசம்

Asianet News Tamil  
Published : Feb 10, 2017, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
"ஜெயலலிதா ஆத்மா ஓ.பி.எஸ்.சை ஒரு போதும் மன்னிக்காது" - வைகைச்செல்வன் ஆவேசம்

சுருக்கம்

அ.இ.அ.தி.மு.க. கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கும்  முதல்வர் பன்னீர் செல்வத்தை ஒருபோதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆத்மா மன்னிக்காது என்று அ.தி.மு.க.செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அ.தி.முக. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வத்தின் அணியில் சேர்ந்து, பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதையடுத்து, மதுசூதனனை கட்சியின் அவைத்தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது.

இது குறித்து அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், “ அ.தி.மு.க. கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மக்கள் அவர்களை ஒதுக்கி விடுவார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறந்தவர்கள், அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரும் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்துள்ளனர். அ.தி.மு.க. கட்சியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆத்மா ஒருபோதும் பன்னீர் செல்வத்தை மன்னிக்காது.

நிச்சயம், கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராகப் பொறுப்பு ஏற்பார். நல்லசெய்தி விரைவில் வந்து சேரும்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?! திருவிழா கோலத்தில் நீலாங்கரை.!!!
TVK Vijay : 100 கோடி சொத்தை மறைத்து முறைகேடு செய்த தவெக விஜய் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!