Vaccine: வளர்ந்த நாடுகளையே அடிச்சி தூக்கிட்டோம்.. தமிழகம்தான் டாப்பு.. மார்தட்டும் மா.சு..

Published : Dec 11, 2021, 02:43 PM IST
Vaccine: வளர்ந்த நாடுகளையே அடிச்சி தூக்கிட்டோம்.. தமிழகம்தான் டாப்பு.. மார்தட்டும் மா.சு..

சுருக்கம்

இவர்களது மாதிரிகள் பெங்களூர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் முடிவுகள் வரும் என தெரிவித்தார். வளர்ந்த நாடுகளில் 80% தடுப்பூசி போடுவதற்கே சிரமம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 81% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.  

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் பெங்களூர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகளின் முடிவுகள் ஓரிரு தினங்களில் கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் 14வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இதுவரை 7.54 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் 81.30 சதவீதம் பேர் முதல் தவனை தடுப்பூசியும், 48.95 சதவீதம் பேர்  இரண்டாவது தவனை தடுப்பூசியும் செலுத்தியுள்ளதாக கூறினார். மேலும், இந்திய அளவில் 2வது தவனை தடுப்பூசி 53.50 சதவீதம் என்ற அளவில் சென்றுகொண்டிருப்பதாக கூறிய அவர், இந்த அளவை தமிழகம் எட்ட தொடர்ந்து பயணித்துகொண்டிருக்கிறது என்றார். 

தமிழகத்தில் 94,15,147 பேர் 2ம் தவனை செலுத்த வேண்டிய காலம் முடிந்து காத்திருக்கின்றனர். இதன் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக அர்சின் கையிருப்பில் 95 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் இன்று 1600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 85% பேர் முதல் தவணை தடுப்பூசியும்,  60% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, சென்னையில் மட்டும்  இதுவரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 19,21,950 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என தெரிவித்தார். 

கல்வி நிறுவனங்களின், துணை வேந்தர்கள், இயக்குனர்கள், தலைவர்கள், சுகாதாரத்துறை செயலர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதன் மூலம் தடுப்பூசி அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ப்பட்டு வருகிறது. ஹை ரிஷ்க் 9,819 பயணிகள் வந்துள்ளனர் அதில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 43,938 பேரில் 1,303 பயணிகளுக்கு உத்தேச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 5 பேருக்கும் என மொத்தமாக வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்த பயணிகளில் 18 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதில் 9 பேர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையிலும், திருச்சி அரசு மருத்துவமனையில் 4பேரும், நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் ஒருவரும், சென்னை தனியார் அரசு மருத்துவமனையில் 2 பேரும், பெங்களூரில் ஒரும் சிகிச்சையில் உள்ளனர்.இவர்களது மாதிரிகள் பெங்களூர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் முடிவுகள் வரும் என தெரிவித்தார். வளர்ந்த நாடுகளில் 80% தடுப்பூசி போடுவதற்கே சிரரம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 81% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, வேலூர், மதுரை மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதில் சுனக்கம் இருந்தது. வேலூரில், திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட தொண்டு நிறுவனங்கள், மகளில் சுய உதவிக்கு குழுவினருடன் தடுப்பூசி பணிகள் குறித்து 16ம் தேதி ஆலோசனை, 20ம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது. 

முதற்கட்ட பரிசோதனை டிஎம்எஸ் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. பரிசோதனைகறை உறுதி செய்ய பெங்களூர் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான சான்றிதழ் குளறுபடிகள் விரைவில் சரிசெய்யப்படும். தியேட்டர்களில் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!