கொரோனாவுக்கு சமாதி.. ஜனவரி 2 ஆம் தேதி நாடுமுழுவதும் தடுப்பூசி ஒத்திகை.. மத்திய அரசு அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 31, 2020, 5:10 PM IST
Highlights

இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளுக்கான தயார் நிலை தொடர்பாக மாநில சுகாதார துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஜனவரி 2 ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி  ஒத்திகை நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது,  180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ்,  இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே கொரோனாவால் அதகம் பாதித்த நாடாக உள்ளது. இதுவரை அங்கு 2 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

அதற்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது,  இந்தியாவில் இதுவரை 1  கோடியே 26 லட்சத்து 7 ஆயிரத்து 183 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 264 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் உலகளவில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் திரிபு அடைந்து, புதிய வைரஸாக பரவி வருகிறது.  இது மேற்கத்திய நாடுகளில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் தற்போது தென்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில்  உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்  எனவும், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதேபோல் எந்த குழப்பமும் இல்லாமல் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்றது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளுக்கான தயார் நிலை தொடர்பாக மாநில சுகாதார துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை நடத்தினார். தடுப்பூசி போடும் பணிகளுக்கு, மாநில அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாநில சுகாதாரத் துறைச் செயலாளர்கள் அப்போது விளக்கமளித்தனர். அதன் பின்னர் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பூசி போடும் பணிக்கு தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 2ஆம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் எனவும்,  மாநில தலைநகரங்களிலும் இந்த ஒத்திகை மூன்று கட்டங்களாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு இடங்களில் தடுப்பூசி  ஒத்திகை நடைபெறும் என  சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

 

click me!