அடப்பாவிகளா  இதையும் விட்டு வைக்க மாட்டீங்களா ? உத்தரபிரதேசத்தில் தொடரும் அத்துமீறல்   காமெடி !!

First Published Jun 3, 2018, 5:45 AM IST
Highlights
uttrapradesh govt put saffron pain in toilet


உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதாற்காக ஹர்டேய் பகுதிக்கு வரவுள்ளதையடுத்து நிகழ்ச்சி அரங்கம் ஒன்றின் கழிப்பறை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ந்நனசையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச முதலமைச்சராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற முதல் அம்மாநிலம் முழுவதும் காவி மயமாகி வருகிறது.  அரசு அலுவலங்கள், பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன்கள் என அனைத்திற்கும்  மாநில அரசு காவி வண்ணத்தை பூசி வருகின்றனர்.

‘சென்ற மாதம்  அம்மாநிலத்தில் உள்ள  அம்பேத்கார் சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டதால்  நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. அரசியல் கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததால் பின்னர் அம்பேத்கர்  சிலைக்கு நீல நிறத்தை அடித்தனர். 



இப்படி எங்கும் காவி மயமாக காணப்படும் உத்தரப் பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் காவி நிறமே  பிரதானமாக இருக்கும்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநில ஹர்டோய் மாவட்டத்தில், ரஷ்கான் அரங்கத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் யோகியின் வருகையையொட்டி விழா மேடை, தோரணங்கள் எல்லாம் காவி நிறத்திலும், காவி நிற திரைச்சீலை, காவி நிறப் பட்டைகள் என எல்லாம் காவியாக காட்சியளித்தது. 

அங்கு யோகி ஆதித்யநாத் சுமார் 8 மணி நேரம் மடடுமே தங்கவுள்ளதால் அரங்கத்தின் சுவர்களில் காவி நிறப்பட்டைகள் வரையப்பட்டு, காவி நிற திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதன் உச்சமாக அங்குள்ள கழிவறை சுவர்களில் இருந்த வெள்ளை டைல்ஸ் ஓடுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவி நிற டைல்ஸ் ஓடுகள் பதிக்கப்பட்டன.  தற்போது இதுவும் பெரும் சர்ச்சையாக மாறிவருகிறது. 

ஏற்கனவே அரசு நிதியில்  கட்டப்பட்ட கழிவறைகளுக்கு கூட காவி நிறத்தை அடித்தது சர்ச்சையாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் இத்தகைய செயல்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

click me!