திமுகவிற்கு ஓட்டு போட்டால் இதுவும் நடக்கும்.. தம்பிதுரை எச்சரிக்கை

Asianet News Tamil  
Published : Jun 02, 2018, 05:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
திமுகவிற்கு ஓட்டு போட்டால் இதுவும் நடக்கும்.. தம்பிதுரை எச்சரிக்கை

சுருக்கம்

thambidurai criticize dmk conducted model assembly

திமுகவிற்கு ஓட்டு போட்டால், அறிவாலயத்தையே தலைமை செயலகமாக மாற்றி விடுவார்கள் என அதிமுக எம்பி-யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்துவருகிறது. சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்துவருகிறது. சட்டசபை கூடிய முதல் நாளே எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக கூடிய சட்டசபை கூட்டத்தொடர் முழுவதையும் முழுவதையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் சட்டசபை கூட்டத்துக்கு எதிராக அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, திமுக நடத்திய போட்டி சட்டசபை கூட்டத்தை விமர்சித்தார். அப்போது பேசிய தம்பிதுரை, அறிவாலயத்தில் திமுக நடத்திய போட்டி சட்டசபை கூட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுகவிற்கு ஓட்டு போட்டால்,  அறிவாலயத்தை தலைமை செயலகமாகவே மாற்றிவிடுவர் என விமர்சித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?
அனல் பறக்கும் தேர்தல் களம்..! பிப்.1 முதல் 234 தொகுதிகளிலும் பிரசாரத்தை தொடங்கும் திமுக..