தமிழிசையை தாறுமாறாக விமர்சித்த பெண் கைது

Asianet News Tamil  
Published : Jun 02, 2018, 04:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
தமிழிசையை தாறுமாறாக விமர்சித்த பெண் கைது

சுருக்கம்

woman arrested who scolded tamilisai

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக கருத்து பரப்பியதாக சூர்யாதேவி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பெண் ஒருவர் அவதூறாக பேசும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அவதூறாக பேசிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநில செயலாளர் அனு சந்திரமவுலி உள்ளிட்ட நிர்வாகிகள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், அந்த பெண் வீடியோ பதிவிட்ட முகநூல் பக்கத்தின் மூலம் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீஸார், தமிழிசை குறித்து அவதூறாக பேசிய பெண், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சூர்யாதேவி என்பதை கண்டறிந்தனர். 

பின்னர் சென்னை விருகம்பாக்கத்தில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சூர்யாதேவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!