PM Modi : ராணுவ தளவாட உற்பத்தி முனையமாகிறது உ.பி.. ஏ.கே 203 துப்பாக்கி தயாரிப்புக்கு அனுமதி..

By Raghupati RFirst Published Dec 4, 2021, 12:09 PM IST
Highlights

அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது யோகியின் அரசு.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். 403 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய சட்டப்பேரவையாக உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை உள்ளது.அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால், பல்வேறு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பாஜக தலைவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது அவர்களுக்கு விவசாயிகள் கறுப்பு கொடி காட்டினர். 

அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென்று விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. விவசாயிகள் மீது வாகனம் மோதும் பரபரப்பான காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் மோதியதில் விவசாயிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிறகு வன்முறையாக மாறியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

இதுமட்டுமின்றி, உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இசுலாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பல நாளேடுகளிலும் அன்றாடம் விமர்சிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. 

இது பாஜகவை குறை சொல்ல வேண்டும் என்பதற்கான பொய் பிரச்சாரம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இருந்தபோதும் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றது முதல் சட்டம் ஒழுங்கை சமாளிப்பது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. இன்று வரை யோகி ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

அண்மையில் பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பு புகைப்படங்கள் வைரல் ஆனது. எனவே நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று முடிவு செய்து களத்தில் இறங்கி இருக்கிறார்கள் பிரதமர் மோடியும் - யோகி ஆதித்யநாத்தும். நாட்டின் மிகப்பெரிய மாநிலம் என்பதால் கூடுதல் கவனத்துடன் செயல் பட ஆரம்பித்து இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே உபியின் அமேதியில் பெரிய ராணுவ தளவாடம் அமைய இருக்கிறது என்பதே ஹாட் டாபிக். 

இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பான ராணுவ தளவாடங்கள்  தயாரிப்பில் தன்னிறைவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உபியின் அமேதியில் பெரிய ராணுவ தளவாடம் அமைய இருக்கிறது. இங்குள்ள கோர்வா என்ற பகுதி இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ தளவாட மையமாக செயல்படும். சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ‘ AK-203 ‘ ரக  தாக்குதல் துப்பாக்கிகள் தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

முதல் மேக் இன் இந்தியா வரையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதலில் எப்போதும் அதிகரித்து வரும் முன்னுதாரண மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சியானது ரஷ்யாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் மற்றும் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது. இந்த திட்டம் மேக் இன் இந்தியாவின் ஒரு முக்கிய பகுதியாக அமையும். இந்த திட்டமானது ரஷ்யாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்றும், பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை இது மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

 AK-203 ரக  தாக்குதல் துப்பாக்கிகள், 300 மீட்டர் வரை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவை. குறைந்த எடை, வலுவான மற்றும் பயன்படுத்த எளிதான வகையிலும் இது இருக்கும். வீரர்களின் போர் திறனை மேம்படுத்துவதோடு, இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனையும்  மேம்படுத்தும். இந்தோ - ரஷியன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (IRRPL) என்ற சிறப்பு நோக்க கூட்டு முயற்சியால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தலுக்கு இப்போதே பலமான அஸ்திவாரத்தை அமைத்து வருகிறது பாஜக என்றே கூறலாம்.

click me!