இந்தி தெரியலயா.. அப்போ இந்தியாவை விட்டு வெளியே போங்க.! வைரலாகும் உ.பி அமைச்சரின் சர்ச்சை பேச்சு.!!

By Raghupati RFirst Published Apr 29, 2022, 2:52 PM IST
Highlights

‘இந்தி தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என உத்திரப்பிரதேசத்தின் அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தென்னிந்தியாவில் இந்தி திணிப்பு என்பது மீண்டும் துளிர்விட தொடங்கிவிட்டது. அரசியல்,சினிமா என தற்போது  இந்தி திணிப்பு பற்றி எரிகிறது.  இந்தி மொழி குறித்த விவாதம் நாடு தழுவிய அளவில் எழுந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்ற அலுவல் மொழிக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்துக்கு பதிலாக அனைவரும் இந்தியை பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

அந்நிய மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்து, இந்திய மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். விக்ரம் ராணா பட விழாவில் பேசிய நடிகர் கிச்சா சுதீப்,  இந்தி மொழிப் படங்களும் தென்னிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால், இந்தி மொழி தேசிய மொழியாக இருக்க முடியாது எனத் தெரிவித்தார். அவருடைய பதிவுக்கு பதிலளித்த அஜய் தேவ்கன், தாய் மொழிப் படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்?, இந்தி தான் இப்போதும் எப்போது தேசிய மொழி எனக் கூறியிருந்தார். 

அவரின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது மட்டுமில்லாமல் விவாதத்தையும் கிளப்பியது. இறுதியில் நட்புக்கரம் காட்டி உரையாடலை முடித்துக் கொண்டனர். இந்த நிலையில், நடிகர் சுதீப்பின் கருத்துக்கு கன்னட மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் சுதீப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவரும், அம்மாநில அமைச்சருமான சஞ்சய் நிஷாத் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தி மீது பற்று இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவர். உங்களுக்கு இந்தி பேச முடியாதென்றால் நீங்கள் இந்தியாவை விட்டு விட்டு வேறு நாட்டுக்குச் செல்லலாம்’ என்று தெரிவித்துள்ளார்.உத்திரப்பிரதேசத்தின் அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க : பல்டி அடித்த எடப்பாடி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.. கொடநாடு கொலை வழக்கில் சிக்குவது யார் ?

click me!