கலைஞர் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

First Published Aug 8, 2018, 3:46 PM IST
Highlights

மாபெரும் அரசியல் சாணக்கியனாக விளங்கிய கலைஞர் கருணாநிதியின் புகழ் தான் இன்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. 

நேற்று மாலை காலமான கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் தற்பொழுது ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலை காண மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றது. ராஜாஜி மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அழுகுரலால் நிரம்பி காணப்படுகின்றது, இன்று மாலை நான்கு மணிக்கு அவருடைய உடல் மெரீனாவிற்கு எடுத்து செல்லப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் உடலுக்கு அருகில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

மாபெரும் அரசியல் சாணக்கியனாக விளங்கிய கலைஞர் கருணாநிதியின் புகழ் தான் இன்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. அவரை பற்றி அறிந்துகொள்ளாத பல விஷயங்களை அவருடைய தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர். அதன் படி கலைஞர் அவர்களுக்கு கருணாநிதி என்ற அடைமொழியை வழங்கியது யார் தெரியுமா?

கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார். 

click me!