2 மாதங்களாக டெல்லியில் முகாம்.. தனிமைப்படுத்திக் கொள்ளாமல் சென்ற மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவால் சர்ச்சை.!

By vinoth kumarFirst Published May 25, 2020, 4:58 PM IST
Highlights

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானாந்தா கவுடா தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானாந்தா கவுடா தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் தற்போது சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்துக்குள் குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட 5 மாநிலத்தவர்கள் நுழைய அனுமதி இல்லை. அப்படி வரும் பட்சத்தில் விமானப் பயணிகள் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். பின்னர், 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார். 

இந்நிலையில், 2 மாதங்களாக டெல்லியில் தங்கியிருந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானாந்தா கவுடா இன்று விமானம் மூலம் பெங்களூரு வந்தார். டெல்லி உள்பட 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு யார் வந்தாலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பெங்களூரு வந்த சதானந்தா கவுடா தனிமைப்படுத்தப்படும் முகாமுக்குச் செல்லாமல் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

click me!