தமிழ்நாடு ஆன்மீக பூமி.. திராவிட மாடல் எடுபடாது.! தெறிக்கவிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Published : Jun 12, 2022, 05:50 PM IST
தமிழ்நாடு ஆன்மீக பூமி.. திராவிட மாடல் எடுபடாது.! தெறிக்கவிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

சுருக்கம்

L Murugan : சமூக நீதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் சம்பந்தம் இல்லை. சமூக நீதி பற்றி பேசு முதலமைச்சர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை. இது தான் சமூக நீதியா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். 

எல்.முருகன் பேச்சு

மதுரை மாவட்டம் மேலூரில் பா. ஜ. க சார்பில் மத்திய மோடி அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.  நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், '2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதலே இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. 

பாஜக அரசு

நூற்றுக்கணக்கான நல்ல வளர்ச்சி திட்டங்களை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றது. பத்திரிகைகளை புரட்டினால் விவசாயிகள் மரணம் செய்திகள் வந்த வண்னம் இருந்தன. ஆனால், மோடி ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பாக உள்ளனர். ஏழை மக்களுக்கு வங்கி கணக்கை தொடங்கி நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது.நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. 

’மேக்கின் இந்தியா’ திட்டத்தால் உலக நாடுகள் இந்தியாவை திரும்பிப் பார்க்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மத்திய அரசின் செயல்பாடுகள் உலக நாடுகளுக்கு வழிக்காட்டியாக அமைந்தது.சமூக நீதியில் மத்திய அரசு குறித்து பேச திமுக அரசுக்கு உரிமை இல்லை என்று விமர்சித்தார். திமுக - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களின் வாக்குகளை பெற்றனர். குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கவில்லை.

திராவிட மாடல்

இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.திமுகவினர் கூறும் திராவிட மாடல் என்றால் யாருக்கும் புரியவில்லை. இது ஆன்மீக பூமி, இங்கு திராவிட மாடல் எடுபடாது. சமூக நீதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் சம்பந்தம் இல்லை. சமூக நீதி பற்றி பேசு முதலமைச்சர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை. இது தான் சமூக நீதியா ? சமூகநீதியின் உன்மையான ஹீரோ பிரதமர் மோடி தான். மத்திய அமைச்சரவையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கியுள்ளார்' என்று பேசினார்.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : மொபைல் முழுக்க 150 பெண்களின் ஆபாச வீடியோக்கள்.. பாத்ரூமில் எடுத்த போது வசமாக சிக்கிய சாஃப்ட்வேர் என்ஜினீயர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!