யாரும் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்துள்ளது - ஓ.பி.எஸ் பரபரப்பு தகவல்

Published : Jul 15, 2023, 09:18 AM IST
யாரும் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்துள்ளது - ஓ.பி.எஸ் பரபரப்பு தகவல்

சுருக்கம்

கொடநாட்டில் யாரும் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கொலையும், கொள்ளையும் நடைபெற்றிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொடநாட்டில், யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. அதற்கு உரிய விசாரணை செய்து விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய தலையாய கோரிக்கை. ஒரு நாட்டின் முன்னாள் முதல்வருக்கு இந்த நிலை என்பது மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள் உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, பொது சிவில் சட்டம் குறித்து முதல்வர் கடிதம் எழுதி இருப்பது அவருடைய கொள்கை. பொது சிவில் சட்டம் நாட்டுக்கு தேவையா தேவையில்லையா என்பதை சட்ட வழக்கறிஞர் குழுவிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். வந்தவுடன் விரிவான அறிக்கை தரப்படும். 

தந்தையை விசாரிக்க வந்த போலீஸ்; அச்சத்தில் ஓடி ஒளிந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து தமிழக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அம்மாவின் இடமாகிய கொடநாட்டில், யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. அதற்கு உரிய விசாரணை செய்து விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு நாட்டின் முதல்வருக்கு இந்த நிலை என்பது மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள். உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து அண்ணன், தம்பி இருவர் பலி
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!