சிஏஏ-க்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் திடீர் மனு... இந்தியா கடும் அதிர்ச்சி, எதிர்ப்பு!

By Asianet TamilFirst Published Mar 3, 2020, 10:27 PM IST
Highlights

குடியுரிமைத்திருத்த சட்ட விவகாரத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவை உன்னிப்பாகக் கவனித்துவருவதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துவந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில், “நீதிமன்றத்திற்கு உதவுவம் வகையில் வழக்கில் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
சிஏஏ-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிஏஏ, என்.ஆர்.சி., என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து இஸ்லாமியர்கள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்பட பல தரப்பினர் நாடு முழுவதும் போராடிவருகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்சக்கட்டமாக டெல்லியில் நடந்த கலவரத்தில் 45 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமியர்களின் உடமைகள் சூறையாடப்பட்டன. மத்திய அரசு பல உறுதிமொழிகளை அளித்தபோதும், அதை ஏற்காமல் போராட்டங்கள்  தொடர்ந்துவருகின்றன.

குடியுரிமைத்திருத்த சட்ட விவகாரத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவை உன்னிப்பாகக் கவனித்துவருவதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துவந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில், “நீதிமன்றத்திற்கு உதவுவம் வகையில் வழக்கில் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் இந்திய தூதர் இதை  தெரிவித்துள்ளார். “குடியுரிமைத் திருத்த சட்டம்  இந்தியாவின் உள் விஷயம். சட்டங்களை உருவாக்குவதற்கான இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மை உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை” என்று  தெரிவித்தார்.
இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில், “ஜெனீவாவில் உள்ள எங்கள் நிரந்தர தூதர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மைக்கேல் பேச்லெட்டிடம்  2019 குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்தியாவின் இறையாண்மை தொடர்பான பிரச்னைகளில் யாரும் தலையிட  எந்த உரிமையும் இல்லை. இந்தியச் சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாடு. எங்கள் சுயாதீன நீதித்துறை மீது மிகுந்த மரியாதையையும் முழு நம்பிக்கையையும் நாங்கள் வைத்துள்ளோம். எங்களின் குரல்  மற்றும் சட்டபூர்வமான நிலையான நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

click me!