Ukraine-Russia war: உக்ரமாகும் உக்ரைன் விவகாரம்.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி பேச்சு.!

Published : Mar 23, 2022, 05:47 AM ISTUpdated : Mar 23, 2022, 05:57 AM IST
Ukraine-Russia war: உக்ரமாகும் உக்ரைன் விவகாரம்.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி பேச்சு.!

சுருக்கம்

பிரிட்டன்  பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். இந்த உரையாடலின் போது, ரஷ்யா-உக்ரைன் இடையேயான நெருக்கடியைத் தணிக்க, போரை நிறுத்துவது, பேச்சுவார்த்தைக்கு திரும்புதல் மற்றும் தூதரக ரீதியான தீர்வு பாதைக்கு செல்வது குறித்த இந்தியாவின் நிலைபாட்டை மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

உக்ரைன் - ரஷ்யா உச்சக்கட்ட போர் பதற்றம்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் தொடர் ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமருடன் மோடி பேச்சு

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்;- உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 27வது நாளாக தொடரும் நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நிலைமை குறித்து பிரிட்டன்  பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். இந்த உரையாடலின் போது, ரஷ்யா-உக்ரைன் இடையேயான நெருக்கடியைத் தணிக்க, போரை நிறுத்துவது, பேச்சுவார்த்தைக்கு திரும்புதல் மற்றும் தூதரக ரீதியான தீர்வு பாதைக்கு செல்வது குறித்த இந்தியாவின் நிலைபாட்டை மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

சர்வதேச சட்டம் மற்றும் அனைத்து நாடுகளிடையேயான பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் இந்தியாவின் நம்பிக்கை குறித்து பிரதமர் அப்போது எடுத்துரைத்தார். 

இந்தியா வருமாறு போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு

மேலும் இருதரப்பு நலன்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும்,  வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடுகள், பாதுகாப்பு உள்பட இந்தியா-பிரிட்டன் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. விரைவில் இந்தியா வருமாறு போரிஸ் ஜான்சனுக்கு, இந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி அழைத்து விடுத்தார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி