மீண்டும் காதல் திருமணம் செய்துகொண்ட கவுசல்யா... ’பறை’ இசை கற்றுக்கொள்ளும்போது காதல்...

By sathish kFirst Published Dec 9, 2018, 12:58 PM IST
Highlights

கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை கல்யாணம் செய்துகொண்டார். 

நாட்டையே உலுக்கிய ஒரு வீடியோ ஒன்று இரண்டு ஆண்டுக்கு முன்பாக  வீடியோ  சமூக வலைதளங்களில் உலா வந்தது. வேற்று ஜாதியை சேர்ந்த ஒருவரை மணந்த காரணத்தினால் புதுமண  தம்பதியர்களை பட்டப்பகலில் கூலிப்படை  வெட்டி சிதைத்த பதிவை நாம் அனைவரும் கண்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தோம். இந்த கொடூர படுகொலையால்  சங்கர் பரிதாபமாக உயிரிழக்க, கெளசல்யா வாழ்க்கையே  தசை மாறிப்போனது. 

கௌசல்யா மற்றும் ஷங்கர் கல்லூரி படிக்கும்பொழுது காதலித்து தங்கள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டனர். கௌசல்யாவின் பெற்றோர்கள், மேல் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஷங்கர் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும் இந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்தனர். திருமணமாகி எட்டு மாதம் கடந்த நிலையில் உடுமலைப்பேட்டைக்கு ஷங்கர் மற்றும் கௌசல்யா துணி எடுக்க சென்றபோது கௌசல்யாவின் பெற்றோர்கள் அனுப்பிய கூலி ஆட்கள் ஷங்கர் மற்றும் கௌசல்யாவை அறிவாள்களுடன் தாக்கினர். சம்பவ இடத்தில் உயிரிழந்தார் ஷங்கர், ஆனால் கௌசல்யா வெட்டு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவம் அங்குள்ள சாலையில் இருந்த "சிசிடிவி" கேமராவில் பதிவாக அது வலைத்தளம் முழுவதும் தீயாய் பரவியது.  கணவனைக் கொன்றவர்கள் பெற்றோர்கள் என்று தெரிந்தும் கடைசி வரை போராடிய கவுசல்யா தண்டனையும் வாங்கி கொடுத்தார்.

துயரத்தில் இருந்து துணிவான பெண்ணாக ஒரு சமயத்தில் சராசரியான பெண்ணை போல் பொட்டு வைத்து, புடவை கட்டி, நீண்ட கூந்தலுடன் வலம்வந்த கெளசல்யா, தற்பொழுது முற்றிலும் வேரொருவராக மாறியுள்ளார். தன் அழகிய கூந்தலை வெட்டிவிட்டு, தன்னைச் சுற்றி எங்கும் ஜாதி எதிர்ப்புப் புத்தகங்களை வைத்துள்ளார். தன் தோற்றத்தை மட்டும் கௌசல்யா மாற்றவில்லை, தன் சிந்தனையையும் மாற்றினார்.

சங்கரின் மறைவிற்குப் பின் பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்ந்த . சங்கரின் குடும்பத்தை காப்பாற்ற தன்னை தயார்படுத்தி  வந்த கெளசல்யா.  இருபது வயதான கௌசல்யா தன் கணவரின் மரணத்திற்கு காரணமாய் இருந்த ஜாதிக்கு எதிராய் குரல் கொடுக்க முன் வந்துள்ளார். பல பெண் அமைப்புகளுடன் இணைந்து பணிப்புரிந்து  போராடினார். சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய பல நகரங்களுக்குச் சென்று பொது இடங்களிலும், கூட்டங்களிலும் ஜாதி ஒழிப்பு பற்றி  பேசி வந்த கவுசல்யா தன் கணவரின் சமூகத்தின் தமிழ் பாரம்பரிய ’பறை’-யை இசைக்கவும் கற்று  வந்தார்.

 

தனது கணவர் ஷங்கர் கொலைசெய்யப்பட்ட இறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இன்று திராவிடா் முறைப்படி மறுமணம் செய்து கொண்டாா். கோவை பெரியாா் படிப்பகத்தில் நெருங்கிய நண்பா்கள் மத்தியில் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. கௌசல்யா “நிமிா்பு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளா் சக்தியை திருமணம் செய்து கொண்டாா். சக்தியிடம் தான் கௌசல்யா பறை இசையை கற்றாா்.  சக்திக்கும் கவுசல்யாவும் காதலித்து வந்த நிலையில்  தற்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் நிறுவனா் கொளத்தூா் மணி, தந்தை பெரியாா் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளா் ராம கிருஷ்ணன், வன்னி அரசு மற்றும் பத்திாிகையாளா் எவிடனஸ் கதிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தம்பதியா் இருவரும் உறுதிமொழி ஏற்று தங்களின் வாழ்க்கையை தொடங்கினா்.  

click me!