
சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
திருச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதேபோல் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நகரின் முக்கிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் நடிகரும், மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.