மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது – திருச்சியில் திரளான தொடண்டர்கள் பங்கேற்பு

 
Published : Feb 22, 2017, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது – திருச்சியில் திரளான தொடண்டர்கள் பங்கேற்பு

சுருக்கம்

கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, தனிப்பெரும்பான்மையை காண்பிக்க, ரகசிய வாக்கெடுப்ப நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய கட்சி எம்எல்ஏக்கள் கூறினர்.

ஆனால், அதை செயல்படுத்த வில்லை. எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். மேலும், மு.க.ஸ்டாலின் மீது சட்டமன்ற பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து கவர்னர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சியினர் புகார் கூறினர். மேலும், சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடத்தப்பட்டுள்ளது என கூறி, மாநிலம் முழுவதும் இன்று திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகில், வள்ளுவர் கோட்டம் அருகிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு