இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம்.. வாயை வாடகைக்கு விடும் கமல்.. இறங்கி அடிக்கும் செல்லூர் ராஜு!

Published : Jan 21, 2024, 09:37 AM ISTUpdated : Jan 21, 2024, 09:40 AM IST
இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம்.. வாயை வாடகைக்கு விடும் கமல்.. இறங்கி அடிக்கும் செல்லூர் ராஜு!

சுருக்கம்

பொங்கல் தொகுப்பு 1000 ரூபாய் தற்போது வரையில் 75 சதவீதம் பேருக்கு மட்டும் கொடுத்துள்ளார்கள். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு எதற்கு இவ்வளவு செலவு செய்து மைதானம். 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் பிரேக் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசமாக பேசியுள்ளார். 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட பொதுக்கூட்டம் மதுரை கீரைதுரை பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் திரைப்பட நடிகரும் அதிமுக நட்சத்திர பேச்சாளர் சிங்கமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில்;- எம்ஜிஆர் குறித்து இன்று தமிழகம் முழுவதும் பேசவே தேவை இல்லை. ஏனென்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர் குணம், செய்த சாதனைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. திரைப்படம் வாயிலாக நற்கருத்துகளை பரப்பியவர் எம்ஜிஆர். இன்றைக்கு 4 படம் நடித்தவுடன் நான்தான் முதல்வர் என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். வாயை வாடகைக்கு விடும் கமல்ஹாசன் இன்றைக்கு கொள்கை இன்றி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டுக்கு கூட்டு சேர்ந்துள்ளார். 

இதையும் படிங்க;- திமுகவில் இருந்து கொண்டு தரக்குறைவு பற்றி பேச உங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி.!

விடியல் தருவோம் என்று கூறி 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து ஒரு வாக்குறுதியை மற்றும் நிறைவேற்றி உள்ளார். மேலும் ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளுடன் நடித்த உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். ஆண்டுகள் 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி பெற்று 150 சதவீதம் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர்.

தொட்டியில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மகளிர் காவல்நிலையம் என பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கி சாதனை படைத்தவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இன்றைக்கு அனைத்து திட்டத்திற்கு மூடு விழா நடத்தி வருகிறது திமுக அரசு. அனைத்து மகளிருக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என கூறி தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்குவதாக சொல்கிறார்கள். விலை உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க வக்கு இல்லாத அரசு. போதை பொருள் மட்டும் மலிவாக இளைஞர்களுக்கு கிடைக்கிறது. பொங்கல் தொகுப்பு 1000 ரூபாய் தற்போது வரையில் 75 சதவீதம் பேருக்கு மட்டும் கொடுத்துள்ளார்கள். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு எதற்கு இவ்வளவு செலவு செய்து மைதானம். 

இதையும் படிங்க;- தமிழக மக்களின் பாதுகாப்புக்கு கேள்வி குறி.! ஆராஜகத்தில் ஆளுங்கட்சி... நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம்- சசிகலா

தமிழர் உரிமைக்கு அதிமுக எப்போதும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் பிரேக் கொடுக்க வேண்டும். காவிகள் என எந்த மலை பேசினாலும் எல்லா மலையையும் திராவிட மண் உருட்டி விட்டெரியும். வேறு எவருக்கும் இந்த மண்ணை ஆள வக்கில்லை என்று செல்லூர் ராஜு பேசினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!