
2ஜி வழக்கின் தீர்ப்பு தி.மு.க.வுக்கு ஏக குஷியை கொடுத்திருக்கும் வேளையில், உதயநிதியின் ஸ்டாலின் ‘ட்விட்டர் பதிவு’ என்று இணையத்தில் சுற்றும் படம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.
கடந்த ஏழெட்டு வருடங்களை தி.மு.க.வை ‘வெச்சு செய்த’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலிருந்து ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவருமே விடுதலையாகி இருக்கின்றனர். இது அக்கட்சியை துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறது. ஒரு மாநிலத்தை பல முறை ஆட்சி புரிந்த, தேசிய அரசிலும் அங்கம் வகித்த ஒரு கட்சியை ஜஸ்ட் இரண்டே எழுத்துக்களைச் சொல்லி அப்செட் ஆக்கி ஆட்சிக் கட்டிலை நெருங்க விடாமல் செய்ய முடியும்னா அது ‘2ஜி’ எனும் வார்த்தையால் மட்டுமே சாத்தியம். அப்படியாப்பட்ட வழக்கிலிருந்து தி.மு.க. இப்போது வெளியே வந்திருக்கிறது.
இந்நிலையில், இந்த வெற்றியை ‘வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு’ என்று ஸ்டாலின் கொண்டாடிய வேளையில் அவரது மகனும், நடிகரும், முரசொலி பத்திரிக்கையின் முக்கிய நிர்வாகியுமான உதயநிதி ஒரு போட்டோவை போட்டு தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
அது ‘பர்னால்’ விளம்பரம். நிர்வாணமாக இருக்கும் ஒரு ஆணின் பின் புறத்தில் நெருப்பு பற்றி எரிகிறது, அவனோ தனது முகத்தை தண்ணீரில் மூழ்கடித்தபடி குனிந்து நிற்கிறான். இதுதான் அந்த போட்டோ. அதில் ‘For Those Who Are Burning Today' என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது ‘யாருக்கெல்லாம் இன்று எரிகிறதோ அவர்களுக்காக இது’ என்று பொருள் விளங்கும் படி நக்கலாக குறிப்பிட்டுள்ளார். இது பலரை ஷாக் ஆக்கியுள்ளது.
@udhaystalin என்று உதயநிதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்தான் இது வெளியாகி உள்ளதாக இணையத்தினர் கூறுகிறார்கள்.
தீர்ப்பின் மூலம் என்னதான் மகிழ்ச்சியும், தீர்ப்பின் மூலம் என்னதான் மற்றவர்களை திருப்பி அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் கூட இவ்வளவு வக்கிரமாக, அசூசையான போட்டோவை உதய் பகிர்ந்திருக்க கூடாது என்பதே பல விமர்சகர்களின் வாக்கியம்.
கருணாநிதி தனது கதைகளிலும், காவியங்களிலும் காதலையும், செக்ஸையும் நயமாக உணர்த்தியிருப்பார். அவரது பேரனா இப்படி? என்கிறார்கள்.
என்ன உதய் இப்டி பண்ணிட்டீங்களே உதய்!?