எடப்பாடி எப்படி முதல்வரானார் தெரியுமா..? 2 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை உடைத்த உதயநிதி..!

Published : Apr 10, 2019, 03:22 PM IST
எடப்பாடி எப்படி முதல்வரானார் தெரியுமா..? 2 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை உடைத்த உதயநிதி..!

சுருக்கம்

ஒவ்வொருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக சொன்ன மோடி நாமம் தான் போட்டார். அதே நாமத்தை நாமும் வருகிற 18-ந்தேதி தி.மு.க.விற்கு வாக்களித்து மோடிக்கு போட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.  

ஒவ்வொருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக சொன்ன மோடி நாமம் தான் போட்டார். அதே நாமத்தை நாமும் வருகிற 18-ந்தேதி தி.மு.க.விற்கு வாக்களித்து மோடிக்கு போட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் டி.கே.ஜி நீலமேகம் ஆகியோருக்கு வாக்குகேட்டு, தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ‘’நான் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். இதை மோடி எதிர்ப்பு அலை என சொல்லுகிறார்கள். ஆனால், இது ஸ்டாலின் ஆதரவு அலை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது, மோடி வரவில்லை.
வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார். ஆனால் அனைவருக்கும் நாமம் தான் போட்டார். அதே நாமத்தை நாமும் வருகிற 18-ந்தேதி தி.மு.க.விற்கு வாக்களித்து மோடிக்கு போட வேண்டும்.

நீட் தேர்வினால் அனிதா தற்கொலை செய்துக் கொள்ளவில்லை. மோடியால் தான் உயிரிழந்தார். அதற்கு துணை போனவர்கள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கடந்த ஐந்தாண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. மக்கள் ஓட்டு போட்டு எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. சசிகலாவின் காலை பிடித்து தான் அவர் முதல்வரானவர். அவர் மக்கள் முதல்வர் இல்லை.

தற்போது நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடக்கும் மீதமுள்ள 4 சட்டமன்றங்களுக்கான இடைத்தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக மாறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். வருகிற ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க நாம் சபதம் ஏற்போம். எனவே இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் விரட்டி அடிப்போம்’’ என அவர் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?