பெரியப்பா மு.க.அழகிரி பற்றி மனம் திறந்த உதயநிதி... மனதுக்குள் இவ்வளவு ஏக்கமா..?

By Thiraviaraj RMFirst Published Apr 3, 2021, 12:28 PM IST
Highlights

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதைத்தான் அண்ணா எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

இந்தத் தேர்தலில் எங்கள் பெரியப்பா மு.க.அழகிரி களப்பணியாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘’ஒவ்வொரு தேர்தலின்போதும் திமுகவை இந்து விரோத கட்சி என்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த மாதிரியான குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். மக்கள் முடிவெடுப்பார்கள். தமிழக கோயில்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, குடமுழுக்கு நடத்தினோம். திருவாரூர் தேர் ஓடவைத்ததே கலைஞர்தான். எங்க வீட்டில் பிள்ளையார் சிலை இருக்கா அப்படிங்கிறது முக்கியம் கிடையாது. ஆனால் பிள்ளையார் சிலை இருக்கும் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் அனைத்து சமுதாயத்தினரும் உள்ளே செல்ல வேண்டும், என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதைத்தான் அண்ணா எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். எந்த மதத்துக்கும் தி.மு.க விரோதி கிடையாது.

இந்தத் தேர்தலில் களத்துல எங்கள் பெரியப்பா மு.க.அழகிரி இருந்து களப்பணியாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் களப்பணியாற்றியிருந்தால் கண்டிப்பாக நல்லாத்தான் இருந்திருக்கும்’’என அவர் தெரிவித்தார்.

click me!